உக்ரைன், மால்டோவாவுக்கு வேட்பாளர் அந்தஸ்து – ஒப்புதல் அளித்தது ஐரோப்பிய ஒன்றியம்

பெல்ஜியம் நாட்டின் பிரஸ்ஸல்ஸ் நகரில் ஐரோப்பிய ஒன்றியத்தின் 2 நாள் மாநாடு தொடங்கியது. உக்ரைன், மால்டோவாவை வேட்பாளராக ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 உறுப்பு நாடுகள் அங்கீகரித்தன.

நேட்டோவில் இணையக் கூடாது என்ற வலியுறுத்தலை ஏற்காததால் உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனுக்கு நிதி உதவி மற்றும் ஆயுத உதவி செய்துவரும் ஐரோப்பிய ஒன்றியம், அந்நாட்டை உறுப்பினராக சேர்த்துக் கொள்ள நடவடிக்கை எடுத்து வருகிறது.

ஏனென்றால் உறுப்பு நாடு என்றால்தான் நேரடியாக ராணுவ உதவி செய்ய முடியும். ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவது என்பது எளிதான காரியம் அல்ல. அதற்கான நடைமுறைகள் முடிந்து இறுதிக்கட்டத்தை அடைய பல ஆண்டு காலம் ஆகும். இதற்கிடையே, உக்ரைன் கடந்த பிப்ரவரி 28ம் தேதி அன்று விண்ணப்பம் கொடுத்துள்ளது.

அந்நாட்டுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் முதலில் வேட்பாளர் அந்தஸ்து வழங்க ஐரோப்பிய ஒன்றியம் முடிவு செய்துள்ளது. அதேபோல் மால்டோவா நாட்டுக்கும் இன்று வேட்பாளர் அந்தஸ்து வழங்கப்படும் என்று தெரிகிறது. இந்நிலையில், பெல்ஜியம் நாட்டின் பிரஸ்ஸல்ஸ் நகரில் ஐரோப்பிய ஒன்றியத்தின் 2 நாள் மாநாடு தொடங்கியது. இதில் உக்ரைன் மற்றும் மால்டோவாவை வேட்பாளராக 27 உறுப்பு நாடுகள் அங்கீகரித்தன.

 

 

Malaimalar