உக்ரேனிய மக்களின் சுதந்திரத்தை ரஷ்யா பறித்துவிட்டது: அதிபர் ஸெலென்ஸ்கி

உக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி (Volodymyr Zelenskyy) ரஷ்யப் படையெடுப்பு குறித்த உண்மையை உலகறியச் செய்யும்படி கேட்டுக்கொண்டிருக்கிறார்.

உக்ரேனிய மக்களின் சுதந்திரத்தை ரஷ்யா பறித்துவிட்டதாக அவர் குற்றஞ்சாட்டினார்.

திரு. ஸெலென்ஸ்கியின் காணொளி உரை இங்கிலாந்தில் நடைபெறும் Glastonbury விழாவில் காட்டப்பட்டது.அந்த விழா COVID-19 காரணமாக ஈராண்டாய் நடைபெறவில்லை.

இப்போது மீண்டும் இடம்பெறுகிறது.

உக்ரேனுக்கு அதிக ஆதரவு தேவைப்படுவதாகத் திரு. ஸெலென்ஸ்கி தெரிவித்தார்.
 

 

seithimediacorp