விண்ணைத் தொடும் எரிசக்தி விலை… விறகை நாடும் போலந்து மக்கள்

ரஷ்யா உக்ரேன் மீது படையெடுத்ததிலிருந்து எரிசக்தி விலை உலகெங்கிலும் கிடுகிடுவென உயரத் தொடங்கிவிட்டது.

போலந்தில் இன்னும் சில மாதங்களில் குளிர்காலம் தொடங்கிவிடும்.அதைச் சமாளிக்க விறகை அதிகம் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர் மக்கள்.நிலக்கரியின் விலை சென்ற ஆண்டுடன் ஒப்பிடும்போது மும்மடங்காகியுள்ளது.

ஒரு டன் நிலக்கரியின் விலை சுமார் 620 வெள்ளி.இந்நிலையில் எரிபொருளுக்கு விறகை நாடுகின்றனர், போலந்து மக்கள்.போலந்து நிலப்பரப்பில் காடுகளின் விகிதம் சுமார் 30 விழுக்காடு. அவற்றின் மரங்களை விறகாய்ப் பயன்படுத்தமுடியும்.

இவ்வாண்டு இதுவரை 377,000 கன மீட்டர் விறகுகள் விற்கப்பட்டுள்ளன.சென்ற ஆண்டு அதே காலக்கட்டத்துடன் ஒப்பிடுகையில் அது 30 விழுக்காடு அதிகம்.

 

 

Malaimalar