‘ஓட்டுக்காக ஐசி’ என்ற தேசிய முன்னணியின் ஊழல் – லைக்கிங்

வாக்குகளுக்கு ஈடாக சபாவில் உள்ள ஆவணமற்ற புலம்பெயர்ந்தோருக்கு அடையாள அட்டை களை ஐசி வழங்கியதை பாரிசான் நேஷனலின் துணை கட்சி இறுதியாக ஒப்புக்கொண்டதற்காக  மாக்சிமஸ் ஓங்கிலியை, வாரிசான் தலைவர் பாராட்டியுள்ளார்.

பார்ட்டி பெர்சது சபா பிபிஎஸ் தலைவர் “இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும்” இத்தகைய “துரோக” நடைமுறைகளுக்குப் பின்னால்  பிஎன் கட்சி இருப்பதாக பகிரங்கப்படுத்தியது நல்லது என்று டேரல் லீக்கிங் கூறினார்.

ஆவணமற்ற புலம்பெயர்ந்தோருக்கு ஐசிகள் வழங்குவது கிழக்கு மலேசிய மாநிலத்தின் மக்கள்தொகையை மாற்றியமைத்து சபாவின் மக்கள்தொகையில் அதிவேக அதிகரிப்புக்கு வழிவகுத்ததுள்ளது.

“வாக்குகளுக்கு ஈடாக ஐசி கொடுத்து சபாவை சேதப்படுத்திய பிஎன் கட்சி எது என்று எனது நண்பர் மாக்சிமஸ் ஓங்கிலி கூற முடியுமா?

“ஒவ்வொரு உண்மையான சபாஹானுக்கு எதிராகவும் செய்யப்பட்ட நீதியின் கேலிக்கூத்தை சரி செய்ய அவர் உடனடியாக இதை செய்ய வேண்டும்,  அப்பொழுது தான் அதற்கு பொறுப்பானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும்” என்று வாரிசன் துணைத் தலைவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

சபா மற்றும் சரவாக் விவகார அமைச்சராக இருக்கும் ஓங்கிலி இதை வெளிப்படுத்தியதன் மூலம், தங்கள் சுயநலக் காரணங்களுக்காக அரசைப் பயன்படுத்தும் அரசியல் கட்சிகளுக்கு எதிராக நிலைப்பாட்டை சபாஹான்கள்எடுக்க , கூடுதல் காரணங்களை அவர் வழங்கியுள்ளார் என்று லீக்கிங் கூறினார்.

அவர்களின் தலைமைக்கு மாநிலம் மற்றும் அதன் மக்கள் மீது அக்கறை  இல்லை.

வாக்காளர் பட்டியலானது இந்த சந்தேகத்திற்குரிய MyKad வைத்திருப்பவர்களிடமிருந்து “சுத்தப்படுத்தப்பட வேண்டும்” என்று அவர் அழைப்பு விடுத்தார் .

சந்தேகத்திற்குரிய வாக்காளர்களை வைத்து இன்னும் எத்தனை தேர்தல்கள் நடத்தப்படும்? என்று முன்னாள் சர்வதேச வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார்.

நஜிப் ரசாக் நிர்வாகத்தின் கீழ் உருவாக்கப்பட்ட சபாவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் மீதான விசாரணை ஆணையம் மூலம் ஆவணமற்ற புலம்பெயர்ந்தோரை தனது சொந்த அரசியல் நலன்களுக்காகப் பயன்படுத்துவதில் பிஎன் கட்சியின் ஈடுபாடு நிரூபிக்கப்பட்டதாக  ஓங்கிலி கூறினார்.

இருப்பினும், இது நடந்ததாகக் கூறப்படும் போது அவர் கட்சியின் பெயரையோ அல்லது மாநிலத்தையோ குறிப்பிடவில்லை.

பிஎன் இன் ஒரு பகுதியாக இருந்த பிபிஎஸ்,14வது பொதுத் தேர்தலில் கூட்டணி தோல்வியடைந்த பிறகு வெளியேறியது.

FMT