இஸ்ரேலில் மீண்டும் கலைக்கப்பட்ட நாடாளுமன்றம் – 4 ஆண்டுகளுக்குள் ஐந்தாவது தேர்தல்

இஸ்ரேலில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது.
அதனையடுத்து 4 ஆண்டுகளுக்குள் ஐந்தாம் முறையாக நாடு தேர்தலைச் சந்திக்கவிருக்கிறது.

வெளியுறவு அமைச்சர் யாயிர் லபிட் (YayirLapid) இன்று நள்ளிரவு முதல் தற்காலிகப் பிரதமராகப் பொறுப்பேற்பார்.பிரதமர் நப்டலி பென்னெட்டுக்கு (Naftali Bennett) எதிராக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒருமனதாக வாக்களித்தனர்.

அதனையடுத்து, கொள்கைகளால் வேறுபட்ட அவரது 8 கட்சிக் கூட்டணி ஆட்சி ஒரு முடிவுக்கு வந்தது.

எதிர்வரும் தேர்தல் நவம்பர் மாதம் நடைபெறும்.அதிலும் முடிவுகள் நிச்சயமற்றதாகவே இருக்கும் என்று கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன.
திரு. பென்னெட் எதிர்வரும் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று கூறியிருக்கிறார்.

அவருக்கு முன் பிரதமராக இருந்த திரு. பென்யமின் நெட்டன்யாஹூ (Benjamin Netanyahu), தமது கட்சி மட்டுமே சிறந்த மாற்று அரசாங்கத்தை அமைக்க முடியும் என்று கூறியிருக்கிறார்.
அவருக்கு எதிராக லஞ்ச ஊழல் வழக்கு நடந்துவருகிறது. ஆனால் அவர் குற்றச்சாட்டுகளை மறுத்திருக்கிறார்.

இஸ்ரேல் ஆழமான கொள்கைவாதிகளால் பிளவுபட்டு நிற்பதை இந்த நிலை காட்டுவதாக அரசியல் கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.

 

Seithimediacorp