நேட்டோ அமைப்புதான் பிரச்சனைகளை உருவாக்குகிறது- ரஷியா, சீனா பதிலடி

எண்ணற்ற அச்சுறுத்தல்களின் ஆபத்தான கட்டத்தில் உலகம் மூழ்கியுள்ளதாக நேட்டோ மாநாட்டில் தெரிவிக்கப்பட்டது. ரஷிய அதிபர் புதினின் அச்சுறுத்தல்கள் புதிது இல்லை என்று எஸ்டோனிய பிரதமர் பேச்சு

நேட்டோ நாடுகளுக்கு ரஷியா நேரடி அச்சுறுத்தலாக இருக்கிறது என்றும், உலக ஸ்திரத்தன்மைக்கு சீனா கடும் சவால்களை முன்வைக்கிறது என்றும், நேட்டோ மாநாட்டில் பிரகடனம் செய்யப்பட்டது.

சைபர் தாக்குதல்கள் முதல் பருவநிலை மாற்றம் வரை, பெரும் அதிகாரப் போட்டி மற்றும் எண்ணற்ற அச்சுறுத்தல்களின் ஆபத்தான கட்டத்தில் உலகம் மூழ்கியுள்ளது என்று மாநாட்டில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நேட்டோ அமைப்பை ரஷியா மற்றும் சீனா கடுமையாக சாடி உள்ளன. எங்களுக்கு எதிரான அச்சுறுத்தல்கள், எந்த பிரதேசத்தில் இருந்து உருவாக்கப்படுகிறதோ, அதே அச்சுறுத்தல்களை நாங்களும் உருவாக்குவோம், என ரஷிய அதிபர் புதின் எச்சரித்தார்.

நேட்டோதான் உலகம் முழுவதும் பிரச்சினைகளை உருவாக்குகிறது என சீனா குற்றம்சாட்டி உள்ளது. ரஷிய அதிபர் புதினின் அச்சுறுத்தல்கள் புதிது இல்லை என்று எஸ்டோனிய பிரதமர் காஜா கல்லாஸ் தெரிவித்தார்.

 

 

Malaimalar