கூடுதல் தடை விதித்தால்…உலகளாவிய எரிசக்திச் சந்தைகளில் பேரழிவு ஏற்படும் – எச்சரிக்கும் ரஷ்ய அதிபர்

ஷ்யா மீது இன்னும் கூடுதல் தடைகள் விதிக்கப்பட்டால் உலகளாவிய எரிசக்திச் சந்தைகளில் அது பேரழிவை ஏற்படுத்தக்கூடும் என்று அதிபர் விளாடிமிர் புட்டின் (Vladimir Putin) எச்சரித்துள்ளார்.

தடைகள் விதிக்கப்பட்டபோதும் ரஷ்யாவின் எரிபொருள், எரிசக்தித்துறை தொடர்ந்து சீராகச் செயல்படுவதாக அவர் சொன்னார்.உக்ரேனின் கிழக்குப் பகுதியான டொனேட்ஸ்க் (Donetsk) வட்டாரத்தில் சண்டை தீவிரமடைந்துள்ளது.

Bakhmut வட்டாரத்தில் தினந்தோறும் எறிபடை, ஆகாயத் தாக்குதல்கள் நடைபெறுவதாகக் கூறப்படுகிறது.அந்தப் பகுதியைத் தற்காக்கும் உக்ரேனியப் படையினர் ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கைகளை மெதுவடையச் செய்ய, சுரங்கங்களைத் தோண்டத் தொடங்கியிருக்கின்றனர்.

உக்ரேன் தலைநகர் கீவுக்கு இன்னும் கூடுதல் உதவி வழங்கப்படுகிறது. அமெரிக்கா, துரித ஆற்றல் கொண்ட 4 ஏவுகணை அமைப்புகளைக் கொடுக்கவிருக்கிறது.

கூடுதல் ஆயுதங்களையும் போர்ப் பொருள்களையும் சேர்த்து அதன் மொத்த மதிப்பு 400 மில்லியன் வெள்ளி என்று கூறப்படுகிறது.இதற்கு முன்னதாக அமெரிக்கா அனுப்பியிருந்த 8 அமைப்புகளைக் கொண்டு ரஷ்யத் தளபத்தியத் தளங்களும் ஆயுதக் கிடங்குகளும் தகர்த்தப்பட்டதாக உக்ரேன் தெரிவித்தது.

 

smc