ஷாங்காய் நகரில் அதிகரிக்கும் அனல்- வெப்ப அலைக்கான ரெட் அலர்ட்

கடுமையான வெப்பநிலை அதிகரித்து வருவதால், ஷாங்காய் வானிலை ஆய்வு மையம் மக்களுக்கு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. கடந்த வாரம், நாட்டின் பல்வேறு பகுதிகளில் அதிக வெப்பநிலை மற்றும் வெப்ப அலைகள் காரணமாக, சீனா மஞ்சள் எச்சரிக்கையை வெளியிட்டது.

சீனாவின் ஷாங்காய் நகரில் கடந்த சில நாட்களாக வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஷாங்காய் நகர் ஜூலை 5 முதல் தொடர்ந்து ஆறு நாட்களாக மிக அதிக வெப்பநிலையைக் காண்கிறது. கடுமையான வெப்பநிலை அதிகரித்து வருவதால், ஷாங்காய் வானிலை ஆய்வு மையம் மக்களுக்கு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

கடுமையான வெப்பத்தை சமாளிக்கவும், வெப்ப தாக்குதலை தவிர்க்கவும், நண்பகல் நேரங்களில் வெளியில் நடமாடுவதை தவிர்க்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பகல் நேரங்களில் வெளியில் வேலை செய்வதைத் தவிர்க்கவும், அதிக வெப்பநிலையில் வெளியே வரும் தொழிலாளர்கள் தேவையான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது. இந்த நிலையில், அங்குள்ள வானிலை ஆய்வு மையம், மாகாணத்தின் சில பகுதிகளில் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த வாரம், நாட்டின் பல்வேறு பகுதிகளில் அதிக வெப்பநிலை மற்றும் வெப்ப அலைகள் காரணமாக, சீனா மஞ்சள் எச்சரிக்கையை வெளியிட்டது. நாட்டின் சில பகுதிகளில் வெப்பநிலை 39 அல்லது 40 டிகிரி செல்சியஸூக்கு மேல் இருக்கும் என்று கணித்துள்ளது.

 

mm