மெக்சிகோவில் பழங்குடி மொழியைப் பேசியதால் தீ வைத்துக் கொளுத்தப்பட்ட மாணவர்

மெக்சிகோவில் பழங்குடி மொழியைப் பேசியதால் மாணவர் ஒருவர் வகுப்பறையில் தீ வைத்துக் கொளுத்தப்பட்டதாகத் தகவல்கள் கூறுகின்றன.

சென்ற மாதம் 14 வயது ஜுவான் ஜமோரானோவின் (Juan Zamorano) இருக்கையில் மது ஊற்றியதாகச் சக மாணவர்கள் இருவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.தமது கால்சட்டை நனைந்திருப்பதை உணர்ந்த ஜமோரானோ எழுந்து நின்றபோது இரு மாணவர்களில் ஒருவர் அவருக்குத் தீ வைத்ததாக நம்பப்படுகிறது.

மோசமான தீக்காயங்களுக்கு ஆளான ஜமோரானோ இந்த வாரம் தான் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார்.அவர் ஒடோமி (Otomi) என்ற பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர்.அதனால் அவர் பல வாரங்களாக அச்சுறுத்தப்பட்டு வந்ததாக அவர் தரப்பு வழக்கறிஞர்கள் கூறினர்.

சந்தேக நபர்கள், பள்ளி அதிகாரிகள் ஆகியோர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.மெக்சிகோவில் உள்ள பல பழங்குடிச் சமூகங்களில் ஒடோமியும் ஒன்று.

அங்குப் பழங்குடியினருக்கு எதிராகப் பாகுபாடு அடிக்கடி நிகழ்வது வழக்கம்.

 

 

-smc