லண்டனில் கொழுத்தும் வெயில் – பற்றி எரிந்த ரயில் தண்டவாளம்!

லண்டனில் கோடை வெயிலின் வெப்ப நிலை அதிகரித்துள்ளமையால் தண்டவாளங்களில் உராய்வு ஏற்பட்டு தீப்பற்றி எரிந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லண்டன் விக்டோரியா நகர் நோக்கி செல்லும் ரயில்வே தண்டவாளம் கடும் வெப்பத்தின் காரணமாக தானாக தீப் பற்றி எரியும் புகைப்படங்களை தென்கிழக்கு ரயில்வே நிர்வாக இயக்குனர் வெளியிட்டுள்ளார் எனவும் செய்தி வெளியாகியுள்ளது.

கடற்கரை குளங்களை நோக்கி படையெடுக்கும் மக்கள்

இந்நிலையில் அதிகளவான வெயிலின் வெப்பம் தாங்காமல் மக்கள், நீச்சல் குளங்கள், கடற்கரை, தண்ணீர் பூங்காக்கள் உள்ளிட்ட இடங்களை நோக்கி  படையெடுத்துச் செல்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

-IBC