உலகச் செல்வந்தர்கள் பட்டியலிலிருந்து விலகுவேன்: பில் கேட்ஸ்

உலகச் செல்வந்தர்கள் பட்டியலிலிருந்து விலகப்போவதாகவும் தமது சொத்தை நன்கொடையாகக் கொடுக்கப்போவதாகவும் அவர் கூறியுள்ளார். செல்வந்தர் பில் கேட்ஸின் (Bill Gates) ஒரு சபதம்!

20 பில்லியன் டாலர் நன்கொடை அளிக்கப்போவதாக அவர் அறிவித்துள்ளார்.உலகின் 4ஆவது ஆகப்பெரிய செல்வந்தரான அவர் தமது வளங்களை மீண்டும் சமுதாயத்திற்குத் திருப்பிக் கொடுப்பது தமது கடமை என்று தெரிவித்தார்.

2010ஆம் ஆண்டு தமது சொத்தின் பெரும்பகுதியை நன்கொடையாய்க் கொடுக்கப்போவதாகத் திரு. கேட்ஸ் குறிப்பிட்டிருந்தார்.ஆனால் அதன் பின்னர் அவரின் சொத்தின் மதிப்பு இரு மடங்காக அதிகரித்து 118 பில்லியன் டாலராய் உள்ளதாக BBC செய்தி நிறுவனம் கூறியது.

எனினும் இம்மாதம் அவர் Bill & Melinda Gates அறநிறுவனத்திற்கு நன்கொடை அளித்தபின் அது குறைந்துவிடும் என்று தெரிவிக்கப்பட்டது.

மேலும் 2026ஆம் ஆண்டுக்குள் அறநிறுவனம் ஆண்டுக்கு 9 பில்லியன் டாலர் செலவிடும் என்று திரு. கேட்ஸ் தமது Twitter பக்கத்தில் கூறினார்.மற்ற செல்வந்தர்களும் சமூகத்திற்குத் திருப்பிக் கொடுக்க முன்வருவர் என்று அவர் நம்புவதாக BBC சொன்னது.

 

 

 

 

-smc