நேட்டோவில் சேர்வதைத் தடுப்போம் – துருக்கியே அதிபர்

துருக்கியே அதிபர் தயீப் எர்துவான் நேட்டோவில் சேரும் சுவீடன், ஃபின்லந்து ஆகியவற்றின் முயற்சியைத் தடுக்கப் போவதாக மீண்டும் எச்சரித்திருக்கிறார்.

அங்காராவின் நிபந்தனைகளுக்கு நேட்டோ கட்டுப்பட்டால்தான் அந்நாடுகளைச் சேர்க்கமுடியும் என்று அவர் கூறினார். நேட்டோ ராணுவக் கூட்டணியில் தற்போது முப்பது நாடுகள் உள்ளன. புதிதாக நாடுகள் அதில் சேர வேண்டுமானால் எல்லா உறுப்பு நாடுகளும் அதை ஏற்க வேண்டும்.

சுவீடனும் ஃபின்லந்தும் குர்தியப் போராளிகளுக்கு அடைக்கலம் தருவதாகத் துருக்கியே குற்றஞ்சாட்டுகிறது. ரஷ்யா, ஈரான், துருக்கியே ஆகிய மூன்று நாடுகளும் சந்திக்கும் உச்சநிலைக் கூட்டத்துக்குமுன் செய்தியாளர்களிடம் பேசிய திரு. எர்துவான், தடைசெய்யப்பட்ட குர்திஸ்தான் (Kurdistan) மக்கள் கட்சியைச் சேர்ந்த தீவிரவாதிகளுக்கு சுவீடனும் ஃபின்லந்தும் அடைக்கலம் தருவதாகச் சொன்னார்.

அமெரிக்க வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் நெட் பிரைஸ் (Ned Price) திரு. எர்துவானின் கருத்து குறித்து நேரடியாகப் பதில் சொல்ல மறுத்துவிட்டார்.

 

 

-smc