இலவச நீச்சல் குளங்கள், குளிர்ந்த அறைகள்… சுட்டெரிக்கும் வெப்பத்தைக் கையாளும் ஐரோப்பா

ஐரோப்பாவின் பல நாடுகளைத் தகிக்கும் வெப்பம் வாட்டி வதைக்கிறது. பல இடங்களில் வெப்பநிலை என்றும் காணாத அளவு புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

வழக்கமாக ஆண்டின் பெரும்பகுதியைக் குளிர் பருவநிலையில் கழித்த மக்கள் இப்போது கடும் வெப்பத்தைக் கையாள முடியாமல் தவிக்கின்றனர்.

அவர்களுக்கு உதவ அரசாங்கங்கள் கொண்டுவந்துள்ள நடவடிக்கைகள் என்னென்ன?

வெப்ப அலை உதவி அழைப்பு எண்

வெப்ப அலை குறித்துத் தகவல்பெற அந்த எண்ணைத் தொடர்புகொள்ளலாம். வீட்டுத் தொலைபேசியிலிருந்து அழைத்தால் அழைப்பு இலவசம்.

இலவச நீச்சல் குளங்கள்

கடுமையான வெப்பத்தைச் சந்திக்கும் சில பகுதிகளில் மக்கள் நீச்சல் குளங்களை இலவசமாகப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

அது சிறு பிள்ளைகளுக்கும் 70 வயதைத் தாண்டியவர்களுக்கும் பொருந்தும் என பிரான்ஸின் The Local செய்தி நிறுவனம் கூறியது.

பூங்காக்கள் 24 மணிநேரம் திறந்திருக்கும்

சில பகுதிகளில் பூங்காக்கள் 24 மணிநேரமும் திறந்து வைக்கப்படும்.

பூங்காக்களில் பொதுவாக வெப்பநிலை சற்றுக் குறைவாக இருக்கும்.

அதனால் மக்கள் வெப்பத்திலிருந்து தப்ப அவை உதவும் என்று நம்பப்படுகிறது.

குளிர்ந்த அறைகள்

பிரான்ஸின் தனியார் வீடுகளில் குளிர்சாதன இயந்திரங்கள் மிகவும் அரிது.

அதனால் நகர மன்றங்களில் குளிர்சாதன இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ள இடங்கள் வெப்பத்தால் அதிகம் பாதிக்கப்படக்கூடியோருக்குத் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

மேலும் குளிர்சாதன இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ள கடைத்தொகுதிகள், சந்தைகள், கட்டடங்கள் ஆகியவற்றின் தகவல்களை வரைபடமாகச் சில அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.

பிரிட்டன்

பள்ளிகள் மூடல், ரயில் சேவைகள் நிறுத்தம்

பிரிட்டனில் முன்பு எப்போதும் இல்லாத அளவு வெப்பநிலை அதிகரித்துள்ளது.

அதனால் சில பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.

கடும் வெப்பத்தைத் தாங்கக்கூடிய ஆற்றல் பிரிட்டனின் ரயில் கட்டமைப்புக்கு இல்லை என்பதால் சில ரயில் சேவைகளுக்குத் தடங்கல் ஏற்பட்டுள்ளது.

சாலைகளைக் குளுமையாக்கும் முயற்சி

பிரிட்டனின் சில பகுதிகளில் வெப்பத்தால் சாலைகள் சேதமடைவதைத் தவிர்க்க அதன் மீது மணல் தூவப்படுகிறது.

விலங்குகளுக்கு ஐஸ் சிற்றுண்டி

வெப்பத்தால் அவதிப்படுவது மனிதர்கள் மட்டுமல்ல… விலங்குகளும் தான்.

வெப்பத்தைச் சமாளிக்க விலங்கியல் தோட்டங்களில் உள்ள விலங்குகளுக்கு உறைந்த தண்ணீர் போத்தல்கள், உறைய வைத்த உணவு வகைகள் ஆகியவை வழங்கப்படுகின்றன.

-smc