அமெரிக்காவில் பத்தாண்டில் முதல் இளம்பிள்ளைவாதம்

அமெரிக்காவில் சுமார் 10 ஆண்டுக்குப்பின் முதல் இளம்பிள்ளைவாதச் சம்பவம் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

மேன்ஹட்டனிலிருந்து 48 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ரோக்லந்து வட்டாரத்தில் பாதிக்கப்பட்ட நபர் வசிப்பதாக நியூயார்க் நகரின் சுகாதாரத் துறை கூறியது.அமெரிக்காவில் கடைசியாக 2013ஆம் ஆண்டு ஒரு சம்பவம் கண்டறியப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

வாய்வழி கொடுக்கப்படும் தடுப்பு மருந்தை எடுத்துக்கொண்டவரிடமிருந்து அந்த நபருக்குக் கிருமி பரவியிருக்கக்கூடும் என்று அதிகாரிகள் கூறினர்.அமெரிக்காவில் அந்தத் தடுப்பு மருந்து கொடுப்பது 2000ஆம் ஆண்டே நிறுத்தப்பட்டுவிட்டது.

அதனால் அந்த நபருக்குக் கிருமி அமெரிக்காவிற்கு வெளியே பரவியிருக்கலாம் எனச் சுகாதாரத் துறை குறிப்பிட்டது. பாதிக்கப்பட்ட நபர் இருந்த பகுதியில் இளம்பிள்ளைவாதத் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதோர் அதைப் போட்டுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

கிருமி பெரும்பாலும் 5 வயதுக்குக் கீழ் உள்ள பிள்ளைகளைப் பாதிக்கும்.1988ஆம் ஆண்டிலிருந்து இளம்பிள்ளைவாதச் சம்பவங்கள் 99 விழுக்காடு குறைந்துவிட்டன.

 

 

-smc