குரங்கு அம்மை நோயை சர்வதேச அவசர நிலையாக அறிவித்தது உலக சுகாதார நிறுவனம்

உலகம் முழுவதும் இதுவரை 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை குரங்கு அம்மை தாக்கியுள்ளது. உலக நாடுகளை மிரட்டி வரும் குரங்கு அம்மை இந்தியாவிலும் ஊடுருவியுள்ளது

ஆப்பிரிக்காவில் முதல் முறையாகக் கண்டறியப்பட்ட குரங்கு அம்மை நோய், தற்போது பல்வேறு நாடுகளில் பரவியுள்ளது. குரங்கு அம்மை நோயால் உலகம் முழுவதும் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்களுக்கு இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், குரங்கு அம்மை நோயை சர்வதேச அவசர நிலையாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக, உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் அதனாம் டெட்ரோஸ் கூறுகையில், இதுவரை 75 நாடுகளைச் சேர்ந்த 16 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நோய்க்கு 5 பேர் வரை பலியாகி உள்ளனர். பல்வேறு நாடுகளில் பரவி வரும் குரங்கு அம்மை நோயைக் கட்டுப்படுத்த தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உலக நாடுகளை கேட்டுக் கொண்டுள்ளோம் என்றார்.

 

-mm