ஐரோப்பாவின் கடும் வெப்பம் அந்தக் கண்டம் முழுவதும் வறட்சியை ஏற்படுத்தியுள்ளது.ஆங்காங்கே வீசும் அனல்காற்றால் காடுகள் பற்றி எரிகின்றன.
கிரீஸ்:
கிரீஸின் லெஸ்பாஸ் தீவில் காட்டுத்தீ மூண்டது.தீவின் பிரபல சுற்றுலாத்தலமான வதேராவை (Vatera) காட்டுத்தீ சூழ்ந்துள்ளது.
அங்கிருந்த மக்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.அப்பகுதியில் பரவியுள்ள தீயைக் கட்டுக்குள் கொண்டுவர தீயணைப்பாளர்கள் சுமார் 3 நாள்களாகப் போராடுகின்றனர்.
அங்கு சூழ்ந்துள்ள கடும் புகைமூட்டம் தீயைக் கட்டுக்குள் கொண்டுவருவதற்குத் தடையாக இருப்பதாக அதிகாரிகள் கூறினர்.
இத்தாலி:
இத்தாலியின் வடகிழக்கிலும் காட்டுத்தீச் சம்பவங்கள்.விமானங்களையும் ஹெலிகாப்டர்களையும் கொண்டு தீயணைப்பாளர்கள் தீயை அணைக்க முயல்கின்றனர்.
இத்தாலி கடந்த 70 ஆண்டுகள் காணாத கடும் வறட்சியை எதிர்நோக்கியுள்ளது.
ஸ்பெயின்
காட்டுத்தீயால் இந்த ஆண்டு மட்டும் ஸ்பெயின் குறைந்தது சுமார் 200 ஆயிரம் ஹெக்டர் நிலப்பரப்பை இழந்துள்ளது.
போர்ச்சுகல்
போர்ச்சுகலில் சுமார் 48 ஆயிரம் ஹெக்டர் நிலப்பரப்பு காட்டுத்தீயால் அழிந்தது.
-smc