பிரிட்டனின் ரிஷி சுனாக், லிஸ் டிரஸ் – காரசாரமான முதல் விவாதம்

பிரிட்டனின் பிரதமர் வேட்பாளர்கள் ரிஷி சுனாக், லிஸ் டிரஸ் (Liz Truss) இடையில் காரசாரமான முதல் விவாதம் நடந்துமுடிந்துள்ளது.

கன்சர்வேடிவ் கட்சி வேட்பாளர்களான அவர்கள் இருவரும் வரிக் கழிவுகள், சீனா விவகாரம், பருவநிலை மாற்றம் ஆகியவை குறித்து விவாதித்தனர்.
இருப்பினும், வாழ்க்கைச் செலவின நெருக்கடி விவாதத்தில் முக்கிய இடம் பிடித்தது.

வரிக் கழிவுகள் குறித்த விவாதம் தீவிரமாக இருந்தது.வெளியுறவு அமைச்சராகப் பொறுப்புவகிக்கும் திருவாட்டி டிரஸ் உடனடியாக வரிகளைக் குறைக்கும் தமது திட்டத்தை விவரித்தார்.

முன்னாள் நிதியமைச்சரான திரு சுனாக் திட்டங்களைச் சாடினார்.சீனாவைப் பொறுத்தவரைத் திரு சுனாக் கடுமையான நடவடிக்கைகளுக்கு அழைப்புவிடுத்தார். சீனா தேசியப் பாதுகாப்புக்கு ஓர் அச்சுறுத்தல் என்றார் அவர்.

ஆனால் திருவாட்டி டிரஸ், பிரிட்டனின் நிதியமைச்சு சென்ற மாதம் சீனாவுடன் நெருக்கமான பொருளியல், இருதரப்பு உறவுகள் வேண்டும் என்று வலியுறுத்தியதைச் சுட்டி பதிலடி கொடுத்தார்.

கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படும் இவர்களில் ஒருவர், பிரிட்டனின் அடுத்த பிரதமராவார்.முடிவுகள் செப்டம்பர் முதல் வாரத்தில் தெரியவரும்.

 

-smc