அமெரிக்கா ‘நெருப்புடன் விளையாடுகிறது’: சீனா

தைவான் விவகாரத்தில் அமெரிக்கா ‘நெருப்புடன் விளையாடுவதாக’ சீன அதிபர் சி சின்பிங் அமெரிக்க அதிபர் ஜோ பைடனிடம் கூறியுள்ளார்.

அது குறித்துச் சீன ஊடகங்கள் தகவல் வெளியிட்டன.திரு. பைடனும் திரு. சியும்  4 மாதங்களுக்குப் பிறகு முதன்முறையாகத் தொலைபேசி வழி உரையாடியுள்ளனர்.

இருநாடுகளின் கவனத்துக்குரிய விவகாரங்கள் பற்றிக் கலந்துபேசப்பட்டது.அடுத்த மாதம் அமெரிக்க நாடாளுமன்ற நாயகர்  நான்சி பெலோசி (Nancy Pelosi) தைவானுக்குச் சென்றால் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவுகள் மேம்பட முடியாது என்று பெய்ச்சிங் எச்சரித்தது.

அதுபோன்ற ஒரு பயணம் மேற்கொள்ளப்பட்டால்
அது பதில் நடவடிக்கை எடுப்பதற்கு ஒரு தூண்டுதலாக அமையும் என்று சீனா சொன்னது.உக்ரேனை ரஷ்யா படையெடுத்துள்ள வேளையில், அமெரிக்க அதிகாரிகள் இந்த விவகாரத்தை மெத்தனமாகக் கையாள்வதாக அது தெரிவித்தது.

 

 

-smc