காபூல் கிரிக்கெட் மைதானத்தில் குண்டுவெடிப்பு – 4 பேர் காயம்

காபூலில் கிரிக்கெட் போட்டி நடைபெற்றபோது மைதானத்தில் குண்டு வெடித்தது. இந்த குண்டு வெடிப்பில் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் போட்டி நடைபெற்று கொண்டிருக்கும் போது குண்டு வெடித்தது. அதில் 4 பேர் காயமடைந்துள்ளனர். இத்தகவலை ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரிய உறுப்பினர் உறுதிப்படுத்தி உள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், காபூலில் ஷெப்கிஸ் லீக் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. அதன் லீக் போட்டி காபூல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது திடீரென குண்டு வெடித்தது.

இதில் 4 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தில் விளையாட்டு வீரர் யாரும் காயமடையவில்லை என அவர் தெரிவித்தார். கிரிக்கெட்போட்டி நடைபெற்ற போது குண்டுவெடிப்பு நடந்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

-mm