கைப்பற்றிய உக்ரைன் நகரங்களில் வாக்கெடுப்பு நடத்த ரஷ்யா திட்டம்

ரஷ்யா, தான் தெற்கு உக்ரைனில் கைப்பற்றியுள்ள நகரங்களில் வாக்கெடுப்புகள் நடத்த திட்டமிட்டு வருவதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது.

அதாவது, கைப்பற்றப்பட்ட உக்ரைன் நகரங்களை ரஷ்யாவுடன் சேர்ப்பது தொடர்பில் இந்த ஆண்டு இறுதிவாக்கில் வாக்கெடுப்பு நடத்த ரஷ்யா திட்டமிட்டு வருகிறதாம்.

அதற்காக, தான் கைப்பற்றியுள்ள இடங்களில் புதிதாக அதிகாரிகளை ரஷ்யா நியமித்துள்ளதாம்.

அந்த அதிகாரிகள் வாக்கெடுப்பு பதிவேடுகளை உருவாக்குவதற்காக, தங்கள் தனிப்பட்ட விவரங்களைக் கையளிக்கும்படி பொதுமக்களைக் கட்டாயப்படுத்தலாம் என பிரித்தானிய பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.

 

 

-tw