உக்ரேனிலிருந்து முதல் தானியக் கப்பல் நாளை புறப்படும் – துருக்கியே அதிபரின் பேச்சாளர்

உக்ரேனியத்  துறைமுகங்களில் இருந்து தானியங்களை ஏற்றிச்செல்லும் முதல் கப்பல் நாளை (1 ஆகஸ்ட்) புறப்படும் வாய்ப்புள்ளதாகத் துருக்கியே அதிபரின் பேச்சாளர் இப்ராஹிம் கலின் (Ibrahim Kalin) கூறியுள்ளார்.

ஏற்றுமதி தொடர்பான அனைத்து விவரங்களும் சுமுகமாக முடிந்தால் நாளை கப்பல் துறைமுகத்தை விட்டு வெளியேற அதிக வாய்ப்பு உள்ளது என்று அவர் தெரிவித்தார்.

இஸ்தான்புல்லில் உள்ள கூட்டு ஒருங்கிணைப்பு மையம் ஏற்றுமதி செய்வதற்கான இறுதிப் பணிகளை விரைவில் முடிக்கும் என்றும் திரு. கலின் கூறினார்.உலகளாவிய கோதுமை ஏற்றுமதியில் முன்னணி வகிக்கும் ரஷ்யாவும் உக்ரேனும் கடந்த வாரம்  ஐக்கிய நாட்டு ஏற்பாட்டில்  உடன்பாடு ஒன்றில் கையெழுத்திட்டன.

உலகளவில் உயர்ந்துள்ள தானியங்களின் விலைகளைக் குறைப்பது அந்த ஒப்பந்தத்தின் நோக்கம்.அதோடு Chornomorsk, Odesa, Pivdennyi துறைமுகங்களுக்கிடையே பாதுகாப்பான முறையில் தானியங்களை அனுப்பவும் இந்த ஒப்பந்தம் வழிவகுக்கும்.

 

 

-smc