காபூலில் மீண்டும் குண்டுவெடிப்பு – பலர் காயம்

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் மேலும் ஒரு குண்டுவெடிப்புச் சம்பவம் நடந்திருக்கிறது. காபூல் நகரின் மேற்குப் பகுதியில் பரபரப்பான கடை வீதி ஒன்றில் குண்டுவெடிப்பு ஏற்பட்டது.

அது சிறுபான்மை Shi’ite முஸ்லிம் சமூகத்தினர் அடிக்கடி செல்லும் பகுதி என்று கூறப்படுகிறது.தாக்குதலில் பலர் காயமுற்றதாகச் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறினர்.

சம்பவ இடத்திற்கு அவசர மருத்துவ உதவி வாகனங்கள் விரைந்து செல்லும் காணொளிகள் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.யாரும் தாக்குதலுக்குப் பொறுப்பேற்கவில்லை.

முந்திய நாள் காபூல் நகரில் நடத்தப்பட்ட அதே போன்ற தாக்குதலில் குறைந்தது 8 பேர் மாண்டனர். 20க்கும் அதிகமானோர் காயமுற்றனர்.அந்தத் தாக்குதலுக்கு Islamic State அமைப்பு பொறுப்பேற்றுக்கொண்டது.

 

 

 

-smc