சிரியாவில் பெட்ரோல் விலை இரட்டிப்பு, எரிபொருள் பற்றாக்குறையால் மின்சாரத் தடை நீட்டிப்பு

சிரியாவில் பெட்ரோல் விலை 130 விழுக்காடு உயர்த்தப்பட்டிருப்பதாக அந்நாட்டின் வர்த்தக அமைச்சு அறிவித்துள்ளது.

அங்கு எரிபொருள் பற்றாக்குறை எதிர்நோக்கப்படுகிறது. அதனைச் சமாளிக்க நடப்பிலிருக்கும் மின்சாரத் தடை நீட்டிக்கப்படுகிறது.

சிரியாவில் எரிபொருள் விலை (ஒரு லிட்டர்):

முன்னதாக – 1,100 சிரியா பவுண்ட்

இப்போது – 2,500 சிரியா பவுண்ட்

விலையேற்ற விகிதம் – 127%

இவ்வாண்டில் இதுவரை மும்முறை சிரியாவில் எரிபொருள் விலை உயர்த்தப்பட்டுள்ளது. சிரியா நாணயத்தின் மதிப்பு தொடர்ந்து சரியும் வேளையில் எரிபொருள் விலை தொடர்ச்சியாக ஏற்றம் கண்டுள்ளது.

சிரியாவில் 2011ஆம் ஆண்டு போர் தொடங்கியதிலிருந்து அந்நாட்டின் எண்ணெய், எரிவாயுத் துறை பல பில்லியன் டாலர் கணக்கில் இழப்புகளைச் சந்தித்துள்ளது.

 

 

-smc