இலங்கையில் நடந்த கிரிக்கெட் போட்டியில் வென்ற பரிசுத்தொகையை ஆஸ்திரேலியக் கிரிக்கெட் விளையாட்டாளர்கள் அங்குள்ள பிள்ளைகளுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளனர்.
கிரிக்கெட் போட்டிக்காக இலங்கை சென்றிருந்த ஆண்கள் குழு எரிவாயுவுக்கான நீண்ட வரிசைகளையும் ஆர்ப்பாட்டங்களையும் கண்டனர்.
அதனால் ஆதரவளிக்கும் வகையில் 30,000 டாலரை நன்கொடையாக வழங்குவதாகக் கிரிக்கெட் ஆஸ்திரேலியா கூறியது.
அதிகரிக்கும் பணவீக்கத்தாலும் எரிவாயுப் பற்றாக்குறையினாலும் இலங்கையில் மில்லியன் கணக்கானோர் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
“இலங்கை மக்களின் அன்றாட வாழ்க்கை எந்த அளவுக்குப் பாதிக்கப்பட்டுள்ளது என்பது தெளிவாகத் தெரிந்தது”
என்றார் கிரிக்கெட் குழுவின் தலைவர் பேட் கம்மின்ஸ் (Pat Cummins).
நன்கொடைத் தொகை ஐக்கிய நாட்டுக் குழந்தைகள் நிதிக்கு (UNICEF) வழங்கப்படும்.
-smc