குரங்கம்மைத் தடுப்பூசிகளைக் கூடுதலானோர் போட்டுக்கொள்ள வகைசெய்யும் நடைமுறையை ஐரோப்பிய அதிகாரிகள் பரிசீலிக்கின்றனர்.
அமெரிக்கா அந்த நடைமுறையைத் தற்போது பின்பற்றி வருகிறது.
உலக அளவில் ஏறக்குறைய 27,800 பேர் குரங்கம்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் அதிகமானோர் ஓரினப் பாலியல் உறவில் ஈடுபடும் ஆண்கள்.
12 மரணங்கள் பதிவாகியுள்ளன.
தற்போது Bavarian Nordic என்னும் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் மருந்து மட்டுமே குரங்கம்மைத் தொற்றைத் தடுக்கக்கூடியது என்ற அதிகாரத்துவ அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது.
அந்த மருந்து மிகக்குறைந்த அளவில் தயாரிக்கப்படுவதால் அதிகப் பாதிப்புக்குள்ளாகக்கூடிய நாடுகளுக்கே பெரும்பாலும் அது வழங்கப்படுகிறது.
-smc