அமெரிக்க – ரஷ்ய உறவு சரி செய்ய முடியாத அளவுக்கு மோசமாகும்: ரஷ்யா எச்சரிக்கை

அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான உறவு இனி சீர்செய்ய முடியாத அளவுக்கு மோசமாகப் போய்விடலாம் என்று மாஸ்கோ எச்சரித்திருக்கிறது.

உக்ரேனியப் போரை ஒட்டி ரஷ்யாவைப் பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடாக அறிவிப்பது குறித்து வாஷிங்டனில் பேச்சு நடக்கிறது.
இரண்டு செனட்டர்கள் கடந்த மாதம் அந்தப் பரிந்துரையை முன்வைத்தனர்.

லாட்வியா நாடாளுமன்றம் இவ்வாரத் தொடக்கத்தில் அந்த நடவடிக்கையை முன்னெடுத்தது.ஐரோப்பிய நாடுகள் ரஷ்யா மீது மேலும் விரிவான தடைகளைக் கொண்டு வர வேண்டும் என்று அது கூறியது.

ரஷ்யாவைத் தனிமைப்படுத்தி, பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடு என்ற பிரகடனத்தைச் செய்யும் முயற்சியில் வாஷிங்டன் ஈடுபட்டால் இருநாட்டுக்கும் இடையிலான அரசதந்திர உறவு முற்றாக முறிந்து போகக்கூடும் என்று மாஸ்கோ எச்சரித்தது.

 

-smc