பிரிட்டனில் வறட்சி – உருளைக்கிழங்கு, கேரட், வெங்காய அறுவடை குறையலாம்…

பிரிட்டனின் சில பகுதிகளில் வறட்சிநிலை அறிவிக்கப்பட்டுள்ளதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

பயிர் அறுவடையும், கால்நடைகளுக்கான தீவனமும் பாதிக்கப்படலாம் என்று அஞ்சப்படுகிறது.

உருளைக்கிழங்கு, கேரட், வெங்காயம் போன்ற முக்கியமான பயிர்களின் அறுவடை குறைய வாய்ப்பு இருப்பதாக பிரிட்டிஷ் பண்ணையாளர்கள் சங்கம் முன்னுரைத்துள்ளது. பச்சைப் பசேல் என்று காட்சியளித்த நிலப்பரப்பு சாம்பல் நிறத்துக்கு உருமாறியிருப்பதைத் துணைக்கோளப் படங்களில் காண முடிகிறது.

தெற்கு, கிழக்கு, மத்திய இங்கிலாந்தின் சில இடங்கள் வறண்ட பகுதிகள் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன.

பிரிட்டனில் 1935க்குப் பிறகு ஆக வறட்சியான ஜூலை மாதமாகக் கடந்த மாதம் இருந்தது. வழக்கமான மழைப்பொழிவில் சுமார் மூன்றில் ஒரு பகுதியே அங்கு பெய்தது.

 

 

-smc