சிங்கப்பூரையும் மலேசியாவையும் சேர்ந்த காவல் துறையினர், எல்லை தாண்டிச் செயல்படும் மோசடிக் கும்பல்கள் இரண்டை முறியடித்துள்ளனர்.
அந்தக் கும்பல்கள், இந்த வட்டாரத்தில் உள்ளவர்களை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வந்தன. இரண்டு நாடுகளிலும் ஒரே நேரத்தில் நடத்தப்பட்ட அதிரடிச் சோதனைகளில் 13 பேர் கைது செய்யப்பட்டனர்.
சிங்கப்பூரில் மட்டும், மோசடிக்கு ஆளான சுமார் 60 பேர், 1.3 மில்லியன் வெள்ளிக்கும் மேல் இழந்தனர்.கோலாலம்பூரிலும் ஜொகூரிலும் 9 மலேசியர்கள் கைது செய்யப்பட்டனர்.
எல்லை தாண்டிக் கள்ளப் பணத்தை நல்ல பணமாக்கும் குற்றச்செயலில், அவர்களுக்குத் தொடர்பு இருப்பதாகச் சந்தேகிக்கப்படுகிறது.சிங்கப்பூரிலும் நால்வர் பிடிபட்டனர்.
அவர்கள் தங்களது வங்கிக் கணக்கு விவரங்களையோ SingPass கணக்குகளையோ மோசடிக் கும்பல்களிடம் ஒப்படைத்ததாக நம்பப்படுகிறது.மேலும் 24 பேர், புலனாய்வுகளில் காவல் துறைக்கு உதவி வருகின்றனர்.
சட்டவிரோதமாகப் பெற்ற பணத்தை மோசடிக் கும்பல்களுக்கு மாற்றிவிடுவோருக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிங்கப்பூரின் வர்த்தக விவகாரப் பிரிவு குறிப்பிட்டது.
-smc