உக்ரைன் ரஷியா போர் சுமார் 6 மாதங்களாக நடந்து வருகிறது. உக்ரைன் போருக்கு பிறகு ரஷிய மக்களிடம் புதினின் செல்வாக்கு எப்படி இருக்கிறது என்று கருத்து கணிப்பு நடந்தது.
உக்ரைன் நாட்டின் மீது ரஷியா சுமார் 6 மாதங்களாக போர் தொடுத்து வருகிறது. உக்ரைன் மீதான போர் விவகாரத்தில் ரஷிய அதிபர் புதினுக்கு சொந்த நாட்டிலேயே எதிர்ப்புகள் கிளம்பின.
போர் தொடங்கிய சமயத்தில் ரஷியா முழுவதும் பெரிய அளவில் போராட்டங்கள் வெடித்தன. எனினும் அந்த போராட்டம் இரும்பு கரம் கொண்டு ஒடுக்கப்பட்டது.
இந்த நிலையில் உக்ரைன் போருக்கு பிறகு ரஷிய மக்களிடம் புதினின் செல்வாக்கு எப்படி இருக்கிறது என்பது குறித்து தனியார் அறக்கட்டளை நிறுவனம் ஒன்று கருத்து கணிப்பு நடத்தியது. இதில் 77 சதவீதம் பேர் அதிபர் புதினை நம்புவதாக கருத்து தெரிவித்துள்ளனர்.
13 சதவீதம் பேர் மட்டுமே புதினை நம்பவில்லை என்று கூறியுள்ளனர். மேலும் 81 சதவீம் பேர் நாட்டின் தலைவராக புதினின் செயல்பாடுகளை அங்கீகரித்ததாகவும், 10 சதவீம் பேர் அவரது பணியைப் பற்றி எதிர்மறையான பார்வையை கொண்டிருப்பதாகவும், 9 சதவீம் பேர் உறுதியாக தெரியவில்லை என்று கூறியதாகவும் கருத்துகணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.
-mm