ஹாங்காங்கின் கிருமித்தொற்று நிலவரம் மேலும் மோசமாகலாம் – அஞ்சும் அதிகாரிகள்

ஹாங்காங் அதன் ஆகப் பெரிய COVID-19 கிருமித்தொற்று தனிமைப்படுத்தும் நிலையங்களை மீண்டும் திறக்கவிருக்கிறது.

அங்கு கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தொடர்ந்து உயர்கிறது.AsiaWorld Expoவில் உள்ள தனிமைப்படுத்தும் நிலையம் அடுத்த வாரம் அதன் செயல்பாட்டை மீண்டும் தொடங்கும்.

அங்கு 200 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.100 சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.ஹாங்காங்கின் கிருமித்தொற்று நிலவரம் மேலும் மோசமாகக்கூடும் என்று அதிகாரிகள் அஞ்சுகின்றனர்.

மருத்துவமனைகளில் அவசரப்பிரிவில் சேர்க்கப்படாதோருக்கான சேவைகளைக் குறைக்கவும் திட்டமிடப்படுகிறது.புதிய நடவடிக்கைகளால், ஹாங்காங்கின் சுகாதாரப் பராமரிப்புக் கட்டமைப்பு மீதான நெருக்கடி குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நேற்று ஹாங்காங்கில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, மார்ச் மாதத்துக்குப் பிறகு ஆக அதிகமாக 6,400க்கு மேல் பதிவானது.

நோய்ப்பரவல் கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்த முடியுமா என்று மக்கள் கேட்கத் தொடங்கியிருக்கும் வேளையில், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது.

 

-smc