தைவானுக்கு அருகில் தொடர்ச்சியாக ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ளும் சீனா

தைவானின் தற்காப்பு அமைச்சு, அதன் வட்டாரத்தைச் சுற்றிய பகுதியில் 12 போர் விமானங்கள் பறப்பதாகத் தெரிவித்துள்ளது.

அத்துடன் 5 போர்க்கப்பல்களும் தைவானிய நீரிணையில் காணப்பட்டன. தைவானுக்கு அருகில் பெய்ச்சிங் தொடர்ந்து ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.

அமெரிக்க மக்களவை நாயகர் நான்சி பெலோசி இம்மாதம் தைவானுக்குப் பயணம் செய்ததிலிருந்து சீனா அத்தகைய நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

தைவானைத் தனக்குச் சொந்தமான பகுதி என்று உரிமை கொண்டாடுகிறது பெய்ச்சிங். இருப்பினும் தைவானிய அரசாங்கம் அதற்கு வலுவான எதிர்ப்பைத் தெரிவித்துவருகிறது.

 

 

-smc