“உக்ரேனை அவமானப்படுத்துவது ரஷ்யாவின் முக்கிய நோக்கங்களில் ஒன்று” – உக்ரேனிய அதிபர் ஸெலென்ஸ்கி

உக்ரேன் அதன் 31ஆவது சுதந்திர தினத்தை வரும் 24ஆம் தேதி அனுசரிக்கவிருக்கிறது.

அன்றைய தினம் அந்நாட்டிற்கு ரஷ்யா ஏதேனும் தீங்கு விளைவிக்கக்கூடும் என்று உக்ரேனிய அதிபர் வொலோடமிர் ஸெலென்ஸ்கி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உக்ரேனை அவமானப்படுத்துவது ரஷ்யாவின் முக்கிய நோக்கங்களில் ஒன்று என்று அவர் சொன்னார்.

மேலும் ரஷ்யா உக்ரேனிய மக்களிடையே பயம், விரக்தி, சர்ச்சை ஆகியவற்றை உண்டாக்க முனைகிறது என்றும் திரு. ஸெலென்ஸ்கி கூறினார்.

அதனால் ரஷ்யாவின் அனைத்துச் சினமூட்டும் நடவடிக்கைகளையும்  எதிர்க்க அனைவரும் உறுதியோடு இருக்கவேண்டும் என்று அவர் குறிப்பிட்டார். ரஷ்யாவை அதன் பயங்கரவாதச் செயல்களுக்குப் பதிலளிக்க வைக்கவேண்டும் என்றார் திரு. ஸெலென்ஸ்கி.

இந்நிலையில் உக்ரேனின் சுதந்திர தினம், ரஷ்யா அந்நாட்டின் மீது படையெடுத்து ஆறுமாதம் முடிவுற்றதையும் குறிக்கும்.

 

 

-smc