சின்ஜியாங் அறிக்கையை வெளியிட முயற்சி செய்யும் ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் மனித உரிமைப் பிரிவுத் தலைவர்

ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் மனித உரிமைப் பிரிவுத் தலைவர் மிஷெல் பேஷ்லே (Michelle Bachelet), சீனாவின் சின்ஜியாங் (Xinjiang) வட்டாரத்துக்கான அறிக்கையை வெளியிட முயற்சி செய்வதாகக் கூறியுள்ளார்.

அடுத்த வாரம் அவர் பதவி விலகுவதற்கு முன்னர் அதை வெளியிடுவது நோக்கம். சீனா உள்ளிட்ட 40 நாடுகளிடமிருந்து அறிக்கையை வெளியிட வேண்டாம் என்ற கடிதம் கிடைக்கப்பெற்றிருப்பதை அவர் உறுதிசெய்தார்.

இருப்பினும் தமது அலுவலகம் அத்தகைய நெருக்குதலுக்கு வளைந்துகொடுக்காது என்றார் திருவாட்டி பேஷ்லே. அவர் கடந்த மே மாதம் அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டு சீனாவுக்குப் போயிருந்தார்.

மனித உரிமை மீறல்கள் பரவலாய் இடம்பெற்றதாகக் கூறப்படும் சின்ஜியாங் வட்டாரத்துக்கும் அப்போது திருவாட்டி பேஷ்லே சென்று பார்வையிட்டார்.

 

 

 

-smc