உலகில் முதன்முறையாக மூன்று கொடிய நோய்களால் ஒருவர் பாதிப்பு

உலகில் முதன்முறையாக மூன்று கொடிய நோய்களால் பாதிக்கப்பட்ட ஒருவர் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

இத்தாலியை சேர்ந்த 36 வயதுடைய ஒருவரே இந்த கொடிய நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளார்.

குரங்கு அம்மை, கோவிட் -19 மற்றும் எச்ஐவி ஆகிய மூன்று நோய்களால் இவர் பாதிக்கப்பட்டுள்ளார்.

மூன்று கொடிய நோய்களால் ஒருவர் பாதிப்பு

ஜேர்னஸ் ஒஃப் இன்ஃபெக்ஷனில் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, நோயாளியின் பெயர் வெளியிடப்படாத நிலையில், அவருக்கு கோவிட் வைரஸ் இருப்பது உறுதியானது. இதன் பின்னர் முகம் மற்றும் பிற உடல் பாகங்களில் கடுமையான தோல் வெடிப்புகள் உருவாகியுள்ளன.

அத்துடன் கொப்புளங்கள் உருவாகின. நிலைமையின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, அந்த நபர் பின்னர் ஒரு மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவிற்குச் சென்றார், பின்னர் அவர் சேர்க்கைக்காக தொற்று நோய் பிரிவுக்கு பரிந்துரைக்கப்பட்டார். அவரின் உடல் பாகங்களில் புள்ளிகள் மற்றும் தோல் புண்கள் இருப்பது தெரியவந்துள்ளது.

அறிக்கையில் வெளியான தகவல்

கல்லீரல் மற்றும் மண்ணீரலில் ஒரு மிதமான விரிவாக்கம் மற்றும் நிணநீர் கணுக்களின் வலிமிகுந்த நிலையும் ஏற்பட்டது. இதன்போது மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் போது அவருக்கு அறிக்கையில் குரங்கு அம்மை தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

அத்துடன் அவர் எச்.ஐ.வி. தொற்றுக்கும் உள்ளாகியிருந்தார். இருப்பினும் ஒரு வாரத்திற்குப் பிறகு அவர் மருத்துவமனையில் இருந்து வெளியேறினார்.

கோவிட் -19 மற்றும் குரங்கு அம்மையில் இருந்து குணம் பெற்றார். எனினும் எச்.ஐ.வி தொற்றுக்கான சிகிச்சை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

 

 

-tw