கனமழை, வெள்ளத்தால் பாதிப்பு – தேசிய அவசரநிலையை பிறப்பித்தது பாகிஸ்தான்

பாகிஸ்தானில் பெய்து வரும் வரலாறு காணாத மழையால் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. நிர்வாக வசதிக்காக தேசிய அவசர நிலையை பாகிஸ்தான் அரசு பிறப்பித்துள்ளது.

பாகிஸ்தானில் பருவமழை மற்றும் வெள்ளப் பெருக்கால் ஜூன் மாதத்தில் இருந்து இதுவரை குழந்தைகள், பெண்கள் உள்பட 937 பேர் இறந்துள்ளதாக அந்நாட்டின் பருவநிலை மாற்றத்துறை தெரிவித்துள்ளது.

பருவமழை மற்றும் வெள்ளத்திற்கு அதிக எண்ணிக்கையிலான இறப்புகள் சிந்து மற்றும் பலுசிஸ்தான் மாகாணங்களில் பதிவாகியுள்ளன. ஒரு கோடி மக்கள் வீடுகளை இழந்து இடம்பெயர்ந்துள்ளனர். மேலும் 1.5 மில்லியனுக்கும் அதிகமான வீடுகள் முற்றிலும் சேதமடைந்து விட்டன.

இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி நிவாரண முகாம்களுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானின் சிந்த் மாகாணம், கைபர் பக்துன்க்வா , பலோசிஸ்தான் ஆகிய மாகாணங்கள் தான் வெள்ளத்தால் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கனமழை வெள்ள பாதிப்பால் பாகிஸ்தானில் தேசிய அவசர நிலையை அந்நாட்டு அரசு பிறப்பித்துள்ளது. மீட்புப் பணிகளை துரிதமாக மேற்கொள்ள ஏதுவாக நிர்வாக வசதிக்காக அவசர நிலையை பாகிஸ்தான் அரசு பிறப்பித்துள்ளது.

 

-mm