சீனாவின் மெதுவடையும் பொருளியல் இளையர்கள் வேலை தேடுவதில் சிக்கல்களை உருவாக்கியுள்ளது.
அங்கு மில்லியன் கணக்கான இளையர்கள் குறைந்துவரும் வேலைவாய்ப்புகளைக் கைப்பற்றக் கடுமையாய்ப் போட்டியிடுவதாக நம்பப்படுகிறது.
சீனாவில் இளம் தலைமுறையினரில் ஐவரில் ஒருவருக்கு வேலை இல்லை என்று இவ்வாண்டு ஜூலை மாதத்தில் வெளியிடப்பட்ட அதிகாரபூர்வத் தரவுகள் காட்டின. இவ்வாண்டு கோடைக்காலத்தில் அந்நாட்டில் சுமார் 11 மில்லியன் பட்டதாரிகள் வேலைச்சந்தையில் நுழைந்தனர்.
கோவிட்-முடக்கநிலைகளால் பொருளியல் பலவீனம் அடைந்துள்ளதாலும் அதிக எண்ணிக்கையில் பட்டதாரிகள் அண்மையில் வேலைச்சந்தையில் சேர்ந்ததாலும் சீனாவில் இளையர்களிடையே வேலையின்மை விகிதம் அதிகரித்திருப்பதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
-smc