பிரான்ஸில் மீண்டும் அலைமோதும் சுற்றுப்பயணிகள்

விலைவாசி உயர்வு… வெப்ப அலை… காட்டுத் தீ…ஆனால் சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கைக்குக் குறையில்லை பிரான்ஸில்.

கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த அதன் சுற்றுலாத்துறை இப்போது புத்துயிர் பெற்றுள்ளது.உள்ளூரிலும் வெளிநாட்டிலிருந்தும் சுற்றுப்பயணிகள் அலைமோதுகின்றனர்.

இந்த ஆண்டு கோடைக்காலத்தில் மட்டும் பிரான்ஸில் 35 மில்லியன் பேர் விடுமுறைக்குச் சென்றுள்ளதாக அந்நாட்டுச் சுற்றுலாத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.கடன்பற்று அட்டை செலவினம் 2019ஆம் ஆண்டைக்காட்டிலும் 10 விழுக்காடு அதிகரித்ததாக அவர் தெரிவித்தார்.

பிரான்ஸ் சுற்றுலாத்துறையையே அதிகம் சார்ந்துள்ளது.அதன்மூலம் 2 மில்லியன் வேலைகள் உருவாக்குவதோடு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 8 விழுக்காடு பங்களிக்கின்றது.2019ஆம் ஆண்டில் உலகிலேயே ஆக அதிகமான சுற்றுப் பயணிகள் சென்றிருந்த நாடு பிரான்ஸ்.

அந்த ஆண்டு வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகள் சுமார் 90 மில்லியன் பேர் அங்கு சென்றிருந்தனர்.அந்த நிலையைத் தக்கவைத்துக்கொள்ள விரும்புவதாக அமைச்சர் தெரிவித்தார்.

 

 

-smc