ஜப்பான் தற்காப்பை வலுப்படுத்துவதற்கு அதிக ஏவுகணைகள் உற்பத்தி

சீனா, ரஷ்யா ஆகிய நாடுகள் அளிக்கும் ராணுவ மிரட்டல்களுக்குப் பதிலடியாக ஜப்பான் அதன் ஏவுகணைகளை மேம்படுத்திப் பெரிய அளவில் உற்பத்தி செய்யவிருக்கிறது.

தாழப் பறக்கும் ஏவுகணை, அதிவேகத்தில் பாயும் புவியீர்ப்பு ஏவுகணை ஆகியவை பெரிய அளவில் தயாரிக்கப்படும் என்று ஜப்பானியத் தற்காப்பு அமைச்சு அறிவித்தது.

சீனா தொடர்ந்து அதன் ராணுவப் பலத்தைப் பயன்படுத்திச் சூழலை மாற்றியமைப்பதை அமைச்சு சுட்டியது. அத்துடன், சீனா ரஷ்யாவுடனான அதன் உறவை வலுப்படுத்துவதாகவும் அமைச்சு சொன்னது.

சீனா ராணுவப் பயிற்சிகளின் மூலம் தைவானுக்கு நெருக்கடி அளிப்பதாகவும், அது தன் ராணுவப் பலத்தைக் கொண்டு தைவானை இணைக்கும் திட்டத்தை இன்னமும் கைவிடவில்லை என்றும் ஜப்பானியத் தற்காப்பு அமைச்சு சொன்னது.
 

 

-smc