மீண்டும் கோவிட் பரவல்… 21.2 மில்லியன் குடியிருப்பாளர்கள் வசிக்கும் சீன நகரம் முடக்கம்

சீனாவின் சீச்சுவான் மாநிலத்தின் தலைநகரமான செங்டுவில் (Chengdu) முடக்கநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

அங்கு 4 நாள்களுக்குக் கோவிட் பரிசோதனை நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன. நகரில் 21.2  மில்லியன் குடியிருப்பாளர்கள் முடக்கப்பட்டனர். நோய்ப்பரவலைக் கட்டுப்படுத்தும் முயற்சி.

செங்டுவில் மக்கள் இன்று மாலை 6 மணியிலிருந்து வீட்டிலேயே இருக்கும்படி உத்தரவிடப்பட்டது. ஒவ்வொரு வீட்டிலிருந்தும் ஒருவர் மட்டுமே வெளியே சென்று அத்தியாவசியப் பொருள்களைப் பெற்றுக்கொள்ளலாம் என்று நகர அரசாங்கம் அறிக்கையில் குறிப்பிட்டது.

செங்டுவில் நேற்று 157 நோய்த்தொற்றுச் சம்பவங்கள் பதிவாயின.

வரும் ஞாயிற்றுக்கிழமையன்று பரிசோதனை நடவடிக்கைகள் முடிவுறும்போது முடக்கநிலை தளர்த்தப்படுமா என்பதுகுறித்துத் தெளிவான தகவல் வழங்கப்படவில்லை.

 

 

 

-smc