மேலும் நெருக்கடிக்கு உள்ளானது ஐரோப்பாவின் எரிசக்திக் கட்டமைப்பு

ஐரோப்பாவின் எரிசக்திக் கட்டமைப்பு மேலும் நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கிறது. முக்கிய விநியோகப் பாதை வழியாக அனுப்பப்படும் எரிவாயுவை ரஷ்யா நிறுத்தியதால் அந்த நிலை.

மூன்று நாளாகத் தடை செய்யப்பட்டுள்ள விநியோகம் மேலும் நீடிக்கக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது. விதிக்கப்பட்டுள்ள தடைகள் குறித்த குழப்பமே அதற்குக் காரணம் என்று ரஷ்யாவின் அரசாங்க நிறுவனமான Gazprom கூறியது.

அதனால் சாதனங்களைப் பராமரிக்கும் வழக்கமான பணிகளை மேற்கொள்ள முடியவில்லை என்று அந்நிறுவனம் குறிப்பிட்டது. எரிவாயு விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படுவது குறித்து அதிகாரபூர்வமாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்கிறது ஜெர்மனி.

அதுவே அதிக அளவில் ரஷ்யாவிடமிருந்து எரிவாயுவை வாங்குகிறது. ரஷ்யா எரிசக்தி விநியோகத்தைக் கொண்டு மிரட்டுகிறது என்றும்  தற்போதைய நிறுத்தம் ஓர் அரசியல் நாடகம் என்றும் ஜெர்மனி குறிப்பிட்டது.

ஆயினும் ரஷ்யாவின் விநியோகத் தடையைச் சமாளிக்க முடியும் என்று ஜெர்மனியின் எரிசக்திக் கட்டுப்பாட்டு ஆணையத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

 

 

-smc