ஐரோப்பாவுக்கான எரிவாயு விநியோகத்தைத் துண்டிக்கும் ரஷ்யாவின் முடிவுக்குப் பதிலளிக்கத் தயார் என்று ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
உக்ரேன் போருக்கு இடையே தன்னை மிரட்ட எரிவாயுவை ரஷ்யா ஓர் ஆயுதமாகப் பயன்படுத்துகிறது என்று ஐரோப்பா குற்றஞ்சாட்டுகிறது.
நீராவி இயந்திரம் ஒன்றில் ஏற்பட்டுள்ள சேதம் சரிசெய்யப்படும்வரை Nord Stream 1 எரிவாயுக் குழாய் மூடப்பட்டிருக்கும் என்று ரஷ்ய அரசாங்கத்தின் Gazprom நிறுவனம் தெரிவித்தது.
அந்தக் குழாய் ரஷ்யாவின் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் (Saint Petersburg) நகரிலிருந்து பால்ட்டிக் (Baltic) கடல் வழியாக ஜெர்மனிவரை செல்கிறது.
தற்போது போதுமான அளவு எரிவாயு இருப்பில் உள்ளதாக பெர்லின் கூறியது. அந்த நிலைமை மோசமடையும் சாத்தியம் உள்ளதையும் அது மறுக்கவில்லை.
-smc