பாகிஸ்தானில் சுத்தமான குடிநீருக்குத் தட்டுப்பாடு – நோய்கள் அதிகரிக்கக்கூடும்

பாகிஸ்தானில் சுத்தமான குடிநீருக்குத் தட்டுப்பாடு நீடிப்பதால் மக்களிடையே நோய்கள் அதிகரிக்கக்கூடும் என்று தொண்டு அமைப்புகள் எச்சரித்துள்ளன.

வரலாறு காணாத வெள்ளத்தில் சிக்கி மாண்டோர் எண்ணிக்கை 1,200ஐத் தாண்டிவிட்டது.

தற்காலிக முகாம்கங்களில் தங்கியிருப்போருக்கு உணவும், சுத்தமான குடிநீரும் கிடைப்பது பெரும் பிரச்சினையாய் இருப்பதாக ஒரு தொண்டு அமைப்பு கூறியது. பாகிஸ்தானின் மூன்றில் ஒரு பகுதி நிலம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. சேதத்தை மதிப்பிட அரசாங்கம் ஆய்வுக் கூட்டம் நடத்தியுள்ளது.

பாகிஸ்தான் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களில் மூன்றில் ஒருவர் இளம்பிள்ளை என்று தெரியவந்துள்ளது.எதிர்பாராத பேரிடரைச் சமாளிக்க அரசாங்கத்திடம் போதிய  வளங்கள் இருக்கவில்லை என்று திட்டக்குழு அமைச்சர் அசான் இக்பால் (Ahsan Iqbal) கூறினார்.

பருவநிலை மாற்றத்தால் உலக வரலாற்றில் அண்மையில் ஏற்பட்ட மோசமான பேரழிவு  அது என்று அவர் சொன்னார். பாகிஸ்தான் வெள்ளத்தில் 1.4 மில்லியன் வீடுகள் நாசமாயின. 33 மில்லியனுக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டனர்.

வெள்ளப் பேரிடரைச் சமாளிக்க 160 பில்லியன் டாலர் அவசர நிதி தேவை என்று ஐக்கிய நாட்டு நிறுவனமும்,  பாகிஸ்தானும் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளன.

 

 

-smc