20 ஆண்டுகள் காணாத அளவில் சரிந்தது யூரோ

ஐரோப்பிய நாணயமான யூரோவின் மதிப்பு 20 ஆண்டுகளில் காணாத அளவில் சரிந்துள்ளது. ஐரோப்பிய நாடுகளுக்கான எரிவாயு விநியோகத்தை ரஷ்யா நிறுத்தியுள்ளது.

அதைத் தொடர்ந்து ஐரோப்பாவில் எரிசக்தித் தட்டுப்பாடு, அதிகரிக்கும் விலைகள், வளர்ச்சிக்குப் பாதிப்பு ஆகியவை ஏற்படக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

அதன் காரணமாக யூரோவின் மதிப்பு சரிந்ததாக நம்பப்படுகிறது. இந்நிலையில் ஸ்டர்லிங் எனும் ஐரோப்பிய நாணயத்தின் மதிப்பும் குறைந்தது. இதற்கிடையே, அமெரிக்க டாலரின் மதிப்பு 20 ஆண்டுகளில் காணாத அளவில் உச்சத்தை எட்டியது.

 

-smc