கனடாவில் நடந்த கத்திக்குத்துச் சம்பவம் பயங்கரமானது; அது கவலை அளிக்கிறது: பிரதமர் ட்ரூடோ

கனடாவில் நடந்த கத்திக் குத்துச் சம்பவம், பயங்கரமானது என்றும் கவலை அளிக்கிறது என்றும் அந்நாட்டுப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau) கூறியிருக்கிறார்.

அதிகாரிகள் நிலைமையை அணுக்கமாய்க் கண்காணிப்பதாக அவர் சொன்னார்.

சம்பவத்தை உடனடியாகக் கையாண்டோருக்குத் திரு. ட்ரூடோ நன்றி தெரிவித்தார்.இந்நிலையில், சம்பவத்தால் ஏற்பட்ட துயரத்தை வருணிக்க வார்த்தை இல்லை என்று கனடாவின் சஸ்காட்செவன் (Saskatchewan) மாநில முதல்வர் ஸ்காட் மோ (Scott Moe) கூறியிருக்கிறார்.

தாக்குதலை நடத்தியதாக நம்பப்படும் சந்தேக நபர்களைத் தேட முயன்றவர்களுக்கு அவர் நன்றி தெரிவித்தார்.சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசாங்கம் சார்பாகவும் மாநிலம் சார்பாகவும் அவர் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக்கொண்டார்.

கனடா நேரப்படி ஞாயிற்றுக்கிழமை காலையில் கனடாவின் சஸ்காட்செவன் மாநிலத்தில் நடத்தப்பட்ட கத்திக் குத்துச் சம்பவத்தில் 10 பேர் கொல்லப்பட்டனர்.குறைந்தது 15 பேர் காயமுற்றனர்.

மாநிலத்தில் உள்ள பல்வேறு இடங்களில் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.காவல்துறையினர் 13 இடங்களில் விசாரணை மேற்கொள்கின்றனர்.

டேமியன் சாண்டர்சன், மைல்ஸ் சாண்டர்சன் (Damien Sanderson, Myles Sanderson) பெயர் கொண்ட 2 சந்தேக நபர்களைத் தேடும் பணியில் கனடியக் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

 

 

-smc