பத்திரிகை சுதந்திரத்திற்கு அரசாங்கம் உத்தரவாதம் அளிக்கிறது –  பிரதமர்

பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் இன்று நாட்டில் உள்ள ஊடகப் பயிற்சியாளர்களுக்கு எந்தவொரு செய்தியையும் தெரிவிக்க சுதந்திரம் உள்ளதாகவும் ஆனால் கட்டுரைகள் துல்லியமான உண்மைகளின் அடிப்படையில் இருக்க வேண்டும் என்று வகையில் உறுதியளித்தார்.

தகவல்களைப் பரப்புபவர்கள் என்ற அவர்களின் பங்கில், ஊடகப் பயிற்சியாளர்கள் தங்கள் வரம்புகள் மற்றும் பொறுப்புகள்பற்றி அறிந்திருக்கிறார்கள் என்று தான் நம்புவதாகப் பிரதமர் கூறினார்.

“ஊடகங்கள் பொறுப்பாக இருக்க வேண்டும், அதாவது உண்மையைச் சொல்ல, உண்மையான தகவல்களை வழங்க வேண்டும்”.

“தகவல் உண்மையாக இருந்தால், செய்தி எவ்வாறு வழங்கப்பட வேண்டும் என்பதில் அரசாங்கத்திடமிருந்து எந்த ஆட்சேபனைகளும் தடைகளும் இருக்காது,” என்று அவர் கூறினார்.

இஸ்மாயில் சப்ரி, ஸ்ரீ பெந்தாசில் உள்ள மீடியா பிரீமாவிற்கு இன்று(7/9)  சென்றபோது செய்தியாளர்களிடம் இதனைத் தெரிவித்தார்.

தவறான தகவலை எதிர்க்கவும்

பத்திரிக்கை சுதந்திரத்திற்கு அரசாங்கம் அளித்த உத்தரவாதம் அதன் நடவடிக்கைகளில் பிரதிபலிக்கிறது என்றார்.

நிபந்தனைகளைதைத் தாண்டி அவர்கள் சென்றால், அரசாங்கம் நிச்சயமாக அவர்களைக் கண்டிக்கும், (ஆனால்) இதுவரை எந்த ஊடகமும் (அமைப்பு) மூடப்படவில்லை அல்லது அதன் உரிமம் ரத்து செய்யப்படவில்லை.

“இதன் அர்த்தம் பத்திரிகை சுதந்திரம் உள்ளது,” என்று அவர் கூறினார்.

துல்லியமான தகவல்களைப் பரப்புவதில் பிரதான ஊடகங்களின் பங்கு மிகவும் முக்கியமானது என்று விவரித்த பெரா எம்.பி, பொதுமக்கள் தகவல்களுக்குச் சமூக ஊடகங்களை மட்டுமே நம்பக் கூடாது என்றார்.

“எங்களுக்குத் தெரிந்தபடி, தவறான வதந்திகள் பரப்பப்படுகின்றன, இதனால் மக்கள் குழப்பமடைகிறார்கள்”.

“அதனால்தான் டிவி 3 மற்றும் அச்சு ஊடகங்கள் போன்ற முக்கிய ஊடகங்கள், தவறான தகவல்களை வழங்காமல் துல்லியமான தகவல்களை வழங்குவது முக்கியம்,” என்று அவர் கூறினார்.