கனடாவில் 10 பேர் கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் – நான்கு நாட்களின் பின் சந்தேகநபர் கைது

கனடாவில் 10 பேர் கொல்லப்பட்டதுடன், 18 பேர் படுகாயமடைந்த சம்பவத்தின் பிரதான் சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.உள்ளூர் நேரப்படி சுமார் 15:30 மணியளவில் (21:30 GMT) சஸ்காட்செவன், ரோஸ்தெர்ன் நகரில் வைத்து அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்களில் பத்து பேர் வைத்தியசாலையில் உள்ளனர், அவர்களில் மூன்று பேர் ஆபத்தான நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபர் மீது கொலை, கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

அவசர எச்சரிக்கை தளர்வு

Saskatchewan பிராந்தியத்தில் Rosthern பகுதியில் மறைந்திருந்த நிலையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து பிராந்தியத்தில் நடைமுறையில் இருந்த அவசர எச்சரிக்கை தளர்தப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன் மூலம் பொது மக்களுக்கு ஆபத்து இல்லையென அறிவிக்கப்பட்டுள்ளது. சாஸ்கடூனின் வடகிழக்கில் உள்ள வகாவ் அருகே கத்தியுடன் ஆயுதம் ஏந்திய ஒரு நபர் திருடப்பட்ட காரை ஓட்டிச் சென்றதாகக் கிடைத்த முறைப்பாட்டின் பேரில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கனடாவின் Saskatchewan மாகாணத்தில் ஞாயிற்றுக்கிழமை (04) பல இடங்களில் நிகழ்ந்த கத்தி குத்து தாக்குதல் சம்பவங்களில் குறைந்தது பத்து பேர் உயிரிழந்தனர். மேலும் 18 பேர் காயமடைந்தனர்.

மன்னிப்பு கேட்ட தாய்

இந்த சம்பவம் தொடர்பில் டேமியன் மற்றும் மைல்ஸ் சாண்டர்சன் ஆகியோர் முதல் நிலை கொலை மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் தேடப்பட்டு வந்த நிலையில், மறு நாள் டேமியன் சடலமாக மீட்கப்பட்டார்.

மைல்ஸ் சாண்டர்சன் தனது சகோதரரான டேமியனை கொலை செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். எவ்வாறாயினும், சஎன் மகன்களுக்காக நான் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன் என்று சந்தேகநபர்களின் தாயார் தெரிவித்துள்ளார்.

எங்களுக்கு முழு கதையும் தெரியாது, ஆனால் இந்த பயங்கரமான சூழ்நிலையால் பாதிக்கப்பட்ட அனைவரிடமும் நான் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

 

-tw