சீனாவில் இயந்திர மனிதக் கருவிகளுக்கான கண்காட்சி நடைபெற்றுள்ளது.
மருத்துவம் உள்ளிட்ட துறைகளுக்குத் தானியக்கத் தொழில்நுட்பம் எப்படி உதவுகிறது என்பதைத் தெரிந்துகொள்ள ஓர் அரிய வாய்ப்பாக அது அமைந்தது. விளையாட்டு, உற்பத்தி, மருத்துவம் என்று பல்வேறு துறைகளில் உதவும் மனித இயந்திரக் கருவிகளை அங்கே காணலாம்.
அந்தக் கண்காட்சி வருடாந்திர உலக மனித இயந்திரவியல் கருத்தரங்கின் ஓர் அங்கமாக நடத்தப்படுகிறது. 100க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் 500க்கும் மேற்பட்ட கருவிகள் அங்குள்ளன.
5G தொழில்நுட்பத்தில் இயங்கும் இயந்திர மனிதக் கருவிகள் சீனாவின் மருத்துவத்துறைக்குப் புதுவரவு. அறுவைசிகிச்சையின்போது தொலைவிலிருந்தே மருத்துவர்கள் கருவியை இயக்கலாம்.
-smc