உக்ரேனியப் போரால் பல்லாயிரம் சிறுவர்கள் அநாதைகளாகிவிட்டதாக ஐக்கிய நாட்டு நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
போரில் சிதறிப் போன அவர்களைக் காப்பதும் மீட்பதும் பெரும்பாடு என்று அது குறிப்பிட்டது.பிள்ளைகளைப் பாதுகாக்கும் பொறுப்பில் உள்ளவர்கள் பெரும்பணியை எதிர்நோக்குகின்றனர்.
அடைக்கல இல்லங்களில் தங்கியிருந்த சுமார் நூறாயிரம் சிறுவர்கள் வெளியேற்றப்பட்டதாக உக்ரேன் கூறுகிறது.ரஷ்யப் படையெடுப்புக்குப் பிறகு அவர்கள் தங்கள் சொந்த குடும்பம் அல்லது காப்பாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
ஆனால் அவர்களில் சுமார் இருபத்து ஆறாயிரம் சிறுவர்களைக் காணவில்லை என்று UNICEF எனும் ஐக்கிய நாட்டு நிறுவன குழந்தை கல்வி நிதி அமைப்பு சொல்கிறது.ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் உக்ரேன் மீது படையெடுத்தது.
போருக்குப் பயந்து மில்லியன் கணக்கான மக்கள் பல இடங்களுக்கும் போய்விட்டனர்.சிறுவர்கள் என்ன ஆனார்கள் என்பது பற்றி உக்ரேனிய அமைச்சுகளிடம் எந்தத் தகவலும் இல்லாதது குறித்து UNICEF அமைப்பும், உதவி அமைப்புகளும் கவலை கொண்டுள்ளன.
-smc