ஜப்பான்: நாட்டின் தென்மேற்கிலுள்ள பல தீவுகளில் கடுமையான புயல்

ஜப்பானின் தென்மேற்கில் உள்ள பல தீவுகளைக் கடுமையாகப் புயல் தாக்கி வருகிறது.

முயிஃபா (Muifa) புயல் மணிக்கு 162 கிலோமீட்டர் வேகத்தில் வீசுகிறது. பலத்த காற்றும் கனமழையும் அடுத்த இருபத்து நான்கு மணி நேரத்தில் மேலும் கடுமையாகும் என்று அதிகாரிகள் அஞ்சுகின்றனர்.

10 மீட்டர் உயரம் வரை அலை உயரலாம் என்று வானிலை ஆய்வகம் முன்னுரைக்கிறது.

தாழ்வான நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கப்படும்படிக் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

தைவானிய வானிலை ஆய்வகமும் எச்சரிக்கை விடுத்தது.ஆயினும் புயல் தைவானைத் தாக்கும் சாத்தியம் குறைவு.

 

 

-smc