பாகிஸ்தானில் முதலில் வெள்ளம்…இப்போது புழுதிப் புயல்

பாகிஸ்தானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிந்து மாநிலத்தில் புழுதிப்புயல் வீசியதில் தற்காலிகக் கூடாரங்கள் தரைமட்டமாகிவிட்டன.

கடும் வெள்ளத்தால் வீடுகளை இழந்தோர் தற்காலிகக் கூடாரங்களை அங்கு அமைத்திருந்தனர்.

இந்நிலையில் அடுத்த சில நாள்களில் மீண்டும் மழை பெய்யக்கூடும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது. கூடாரங்களை மீண்டும் தூக்கிநிறுத்துவதற்கு மக்கள் போராடி வருகின்றனர்.

இல்லையென்றால் புதிய சூறாவளிவரும்போது, அவர்கள் வெட்டவெளியில் இருக்கும் நிலை ஏற்படும் என்று கூறப்படுகிறது. பாகிஸ்தானில் பெய்த கனத்த மழையாலும் பெருவெள்ளத்தாலும் நாட்டின் பரப்பளவில் சுமார் மூன்றில் ஒருபகுதி தண்ணீரில் மூழ்கியுள்ளது.

33 மில்லியனுக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,400க்கும் அதிகமானோர் மாண்டனர்.

 

-smc